பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

11

கோடை காலத்திலும் பயிர் உழவர்களுக்கு ஊற்று நீர் மிகுதியால் உதவிபுரிவதையும் பெரியபுராணம் கூறுகிறது.

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால்வரை மிசைப் போந்தே
அங்கணித்திலஞ்சந்தன மகிலொடு மணிகள்
பங்கயத்தட நிரைப்பவக் கிழிவது பாலி

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணிற்றிடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழி மிதந்தேறிப்
பள்ள நீள்வயற் பருமடை யுடைப்பது பாலி.

இந்தப் பாலி எனப்படும் பாலாற்றைப்பற்றி கந்த புராணத்தில்-

வாலிதாகிய குணத்தினன் வசிட்ட னென்றுரைக்குஞ்
சீலமாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால்
சால நீடியே தொல்லைநாட் படர்த்திடு தன்மைப்
பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கெளிதோ?

என்றும், காஞ்சிபுராணத்தில்:-

மழையெலாங்கொழுமிச் சொரிமான் பெண்வோகையாற்
கழிய நீண்முலைத் தாரைகள் கான்றன கான்றபான்
முழுதுமோர் நதியாய வணின்று முந்நீர் புகுந்
தழுவிலும் பருமாட்டயர் தீர்த்த மாயதே.

என்றும் பாடப்பட்டிருக்கிறது.

பாலாற்றின் இன்னொரு முக்கியமான உபகுதி பெண்ணை என்ற நதி. அது சந்திரகிரியின் மேற்கிலுள்ள பாறைக் குன்றுகளில் உற்பத்தியாகிறது. அதன் ஓட்டம் அனேகமாய் நேர் கிழக்கே, கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து வரும் அனேக சிற்றாறுகளின் ஜலத்தைப்பெற்றுக்