பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வட ஆற்காடு ஜில்லா

கொண்டு ஆற்காட்டிற் கருகில் அது பாலாற்றில் வந்து கலக்கிறது. இதைத்தவிர்த்துப் பாலாற்றிற்குக் கோட்டாறு, கௌண்டின்னிய நதி என்ற சிறு உபநதிகளுமிருக்கின்றன. இவைகளும் பெண்ணை நதியைப் போலவே ஓடிச் சென்று முறையே ஆம்பூர், குடியாத்தம் என்ற இடங்களில் பாலாற்றுடன் கலக்கின்றன.

பாலாற்றிற்கு அடுத்த முக்கியமான நதி செய்யாறு. இது ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி முதலில் தெற்குப் பக்கமாகத் தென் ஆற்காடு ஜில்லாவிற்குள் ஓடுகிறது. மேட்டுப் பிராந்தியங்களைக் கடந்ததும் கிழக்கு நோக்கி வளைந்து ஜில்லாவின் தெற்குத் காலூகாக்களின் வழியாக ஓடிச் செங்கற்பட்டு ஜில்லாவில் வாலாஜாபாத்திற் கருகில் பாலாறுடன் கலக்கிறது.

பாலாறு, செய்யாறு, பெண்ணை இந்த நதிகளுக்கு நல்ல பாலம், கலுங்குகள் ஏற்பட்டு அனேக ஏரி குளங்கள் ஜலம் நிரப்பப்பட்டு வருகின்றன. மற்றச் சிற்றாறுகளில் ஏற்பட்டுள்ள சிறிய கலுங்குகள் முதலியன பழைய காலத்திய வேலைகளே. இந்த ஜில்லாவின் கிழக்கு பாகத்திய ஜலம் நாராயணவனம், கொறட்டையாறு இந்நதிகளில் வந்து விழுகிறது. நாராயணவனம் என்ற நதி நகரிக்குன்றுகளுக்கு மேற்கிலுள்ள வண்டல் மண் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி மலைத்தொடர்ச்சியிலுள்ள ஒரு இடை வெளி வழியாக ஓடி, அதைக்கடந்து சென்று கிழக்குத் திசையை நோக்கிப் பழைய நாராயணவனம் என்ற ஊரைத்தாண்டிப் போகிறது. கொறட்டையாறு பாலாற்றிற் கருகில் ஆற்காட்டிற்குக் கிழக்கில் ஆறு மைல் தூரத்தில் உற்பத்தியா-