பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

13

கிப் பாலாற்றிலிருந்தும் ஜலத்தைப்பெறும் காவேரிப்பாக்கத்தின் குளத்தின் அதிகமான ஜலத்தைக்கொண்டு ஆரம்பித்து ஓடுகிறது. வட கிழக்காக ஓடித் திருத்தணி நகரி நதிகளின் ஜலத்தைப் பெற்றுக்கொண்டு என்னூருக் கருகில் சமூத்திர சங்கம மாகிறது.

இந்த நதிகள் ஆதியில் ஓடிக்கொண்டிருந்த மார்க்கம் மாறியிருத்தல் வேண்டும். பாலாறோ அல்லது அதன் ஒரு பெரிய கிளை நதியோ முன் கொறட்டையாற்றுப் பள்ளத்தாக்கின் வழியாகச்சென்றிருக்கவேண்டும். இப்பொழுதும் பாலாறு, கொறட்டையாறு இந்த நதிகளை விருத்தக்ஷிர நதி யென்ற சிறிய நதி சேர்த்திருப்பது காணப்படும். இதேமாதிரியே நகரி நதியும் முந்தி நாகலாபுரத்திற் கருகில் நாராயணவனத்துடன் கலந்திருந்தது. அரை மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டித் திருப்பப்பட்டிருக்கும் அடையாளம் ஏற்பட்டிருக்கிறது. இது இந்நகரிநதி கொறட்டையாறுடன் கலக்கும் திருத்தணி நதியில் வந்து கலக்கும்படிச் செய்த ஏற்பாடு போலும். பாலாறும் மனித யத்தனத்தினால் அது ஓடின மார்க்கம் திருப்பப் பட்டதாகக் கூறப்பட்டுளது. காஞ்சீபுரத் தரசர்களுள் ஒருவரது ஊழியராகிய குண்ட கோபால ராவ் என்ற ஒருவர் இந்த நதி முழுவதும் அந்த ராஜதானிக்கருகில் ஓடும்படி செய்ய அணை கட்டித் திருப்பினாராம். காவேரிப்பாக்கத்திற் கருகிலுள்ள கொண்டாபுரத்தில் கோவில் சுவரின் சிலாலிகிதத்தில் அது இருப்பது பாலாற்றிற்குத் தெற்கி லென்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது அது இருப்பது அந்நதிக்கு வடக்கிலேயே.