பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

19

ளது முன்னோர்கள் ராணுவப் பயிற்சி வாய்ந்திருந்தவர்களெனினும் இப்பொழுது கால்நடை மேய்ப்பவர்கள். தவிரவும் இந்த ஜில்லாவில் கம்மாளர்கள், நெசவு நெய்யும் சாலியர்கள், சேணியர்கள், தேவாங்கர்கள், கைக்கோளர்கள், பட்டுநூல்காரர்கள், சாயம் போடும் ரங்காரிகள் முதலியவர்களும், வாணியர்களும், குசவர்களும், செம்படவர்களும், வண்ணார், அம்பட்டர், சக்கிலிகள், போயர்கள் என்ற வேடர்கள், பறையர்கள், தமிழர்கள் முதலானோர்களும் உண்டு.