பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வட ஆற்காடு ஜில்லா

விடத்தி லிருந்தகன்று சில வேடஜாதிப்பெண்களை மணந்து கொண்டு ஜவ்வாது மலைக்குச் சென்று பயிர் செய்பவர்களாகி இந்த மலையாளிகளுக்கு முன்னோர்க ளானார்களாம்.

கம்மர்களைப்பற்றியும் ஒரு கதை உளது. ராக்ஷஸர்களது ஹிம்சையைச் சகியாது ரிஷிகள் விஷ்ணுவினிடம் சென்று முறையிட அவர் அவர்களை லக்ஷ்மியைப் போய்க் கேட்கச்சொன்னார். லக்ஷ்மி தேவியும் அந்த ரிஷிகளுக்குத் தனது கம்மல் ஒன்றைக்கொடுத்து அதை ஒரு பெட்டியில் வைத்து நூறு வருஷம் பூஜிக்கும்படி கூறினாளாம். ரிஷிகளும் அவ்வாறு செய்ய நூறு வருஷங்களானதும் அக் கம்மல் வைத்திருந்த பெட்டியிலிருந்து ஐநூறு வீரர்கள் உற்பத்தியாகி அரக்கர்களை நாசமாக்கிய பின் விவசாயிகளாக ஏற்பட்டார்களாம்! அ ம்மரபினர்களே கம்மர்கள் என்ற ஜாதியார்களாம்!!

கொல்லர்கள் என்ற தெலுங்கு ஜாதியார்கள் கால் நடை பாதுகாக்கும் இடையர்கள். ஆதியில் இவர்கள் ஆடு மாடு மேய்த்துப் பால்விற்று ஜீவனம் செய்து வந்தபோதிலும், இப்பொழுது நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகிக் குடியானவர்களது தொழிலை அனுசரித்தும் வருகிறார்கள். கால் நடைகள் மேய்க்கும் தமிழர்கள் இடையர்களெனப்படுவார்கள்.

குரும்பர்கள் ஆட்டிடையர்கள், முந்திய தென்னிந்தியாவில் பராக்கிரமம் பொருந்தியிருந்த பல்லவர்கள் மரபினர்கள். இவர்கள் இருப்பது இந்த ஜில்லாவின் உன்னதப் பிரதேசங்களிலும் சித்தூர், குடியாத்தம் இவ்விடங்களிலும். தெற்குத் தாலூகாக்களில் கொஞ்சம் கன்னடியர்க-