பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

17

மலையாளிகள் என்ற வகுப்பினர்கள் தமிழ் பேசும் மலைவாசிகள். ஜவ்வாது மலையின் மீதுள்ள கிராமங்களிலும், வேலூர், போளூர் தாலூகாக்களிலும் காணப்படுவார்கள். இவர்களைப்பற்றிய விவரம் விசித்திரமானது. கங்குந்தி வேடர்களில் சிலர் காஞ்சீபுரம் காரைக்காட்டு வேளாளர்களுடைய பெண்களைத் தங்களுக்குக் கலியாணம் செய்து கொடுக்கும்படி கேட்டார்களாம். அவ்வேளாளர்கள் அவமதித்துப் பேசித் தங்களது கன்னிகைகளைத் தரமாட்டோம் என்றதால் கோபம் கொண்ட அக்கங்குந்தி வேடர்கள் ஏழு வேளாளப் பெண்களை அபகரித்துக் கொண்டு கங்குந்தி சேர்ந்தார்களாம். அப்படிக் கொண்டு போன பெண்களை விடுவித்துக்கொண்டு வர ஏழு வேளாளர்கள் ஏழு நாய்களுடன் புறப்பட்டார்கள். புறப்படுகையில் அவர்கள் தங்கள் தங்களது மனைவிகளிடம் அவர்களது நாய்கள் தனியாகத் திரும்பி வரக்கண்டால் அவர்கள் கொல்லுண்டார்களெனக் கொண்டு அவர்களது அபரக்கிரியைகளை நிறைவேற்றலாமென்று கூறிவிட்டுச் சென்றார்கள். பாலாற்றண்டை வந்ததும் அதில் வெள்ளம் அதிகரித்திருக்கக் கண்டு அதைக்கடக்க முயலுகையில் நாய்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கரையேறிக் காஞ்சீபுரத்திற்குத் திரும்பி வந்ததைக்கண்டு அவர்களது மனைவிகள் அவர்களது அபரக்கிரியைகளைச் செய்து முடித்து அவர்களது கைம்பெண்ணாக ஏற்பட்டு விட்டார்கள். பிறகு கன்னிகைகளைக் கவர்ந்து சென்ற வேடர்களைக் கொன்று திரும்பி வந்த வேளாளர்கள் அவர்களது மனைவிகளின் செய்கையால் ஜாதியினின்றும் அகற்றப்பட நேர்ந்து அவ்-

2