பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வட ஆற்காடு ஜில்லா

கிறது. பெருன்பான்மையான ஜனங்கள் ஹிந்துக்களே. விஷ்ணு, சிவனைப் பூசிப்பதுடன் சாஸ்கா, மாரியம்மன் இந்த தேவதைக ளிடமும் எல்லோருக்கும் பய பக்தி உண்டு. ஹிந்துக்களைத் தவிர இந்த ஜில்லாவில் முகம்மதியர்களும், ஜெயினர்களும், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். முக்கால் பங்கு ஜனங்கள் அரிசியை உபயோகியாது கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய விலை சரசமான தானியங்களையே சமைத்து உண்பார்கள்.

இந்த ஜில்லாவிலுள்ள ஜனங்களாவன:--(1) பிராமணர்கள், இவர்களிலும் அனேகம் வகுப்பினர்கள் உண்டு. (2) ஜங்கமலிங்காயத்துக்கள். அதாவது ஓரிடமிருந்து மற்றோரிடம் கொண்டு போகக்கூடிய லிங்கத்தைப் பூசிப்பவர்கள் (3) பண்டாரங்கள் (4) பூசாரிகள் (5) வள்ளுவர்கள் (6) சாத்தானிகள் (7) தாசிகள் (8) பலிஜர்கள் இவர்கள் தெலுங்கு வர்த்தகர்கள் (9) கவரையர்கள் (10) லிங்கபலிஜயர்கள் (11) கோமுட்டிகள் (12) பேரி செட்டிகள் (13) லப்பைகள் (14) ரஜபுத்திரர்கள் இவர்கள் ஸ்வல்பம் வேலூரில் விசேஷமாய் வசிக்கிறார்கள் (15) வேளாளர்கள் (16) அகமுடியர்கள் (17) மலையாளிகள் முதலானோர்கள்.

ரெட்டிகளும் ஏகாரி முதலான விவசாயம் செய்யும் ஜாதியார்களும் நீர் பாய்ச்சியும், கவலை கொண்டிரைத்தும் நெல், கரும்பு, வெற்றிலை, வாழை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, மக்காச்சோளம், சாமை, துவரை, அவரை, உளுந்து, பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கடலை, எள்ளு, முத்துக்கொட்டை, வேர்க்கடலை, பருத்தி, அவுரி, கஞ்சா, சணல், புகையிலை, மிளகாய், மஞ்சள் முதலியன பயிர் செய்கிறார்கள்.