பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

15

கட்டடங்களுக்கு யோக்கியமான கற்கள் வெட்டி யெடுக்கக்கூடிய இடங்களில் முக்கியமானவை :-(1) பள்ளிகொண்டைக் குன்றுகள் (2) வேலூர் (3) வந்தவாசி (4) சேத்துப்பட்டு (5) ராணிப்பேட்டை (6) சோளிங்கபுரம் (7) திருத்தணி முதலான இடங்கள்.

கால் நடைகளைப்பற்றி விசேஷமாகக் கூற இடமில்லை. பல இடங்களில் அனேகம் நெல்லூர் மாடுகள் இருக்கக் காணலாம். ஆனால் அவைகளைக்கொண்டு குடியானவர்கள் கால்நடைகள் விருத்தி செய்வதாக ஏற்படவில்லை. மலைத்தொடர்ச்சிக்கு மேல் நல்ல எருதுகளும் பசுக்களும் உண்டு. எருதுகள் மைசூர் நாட்டைச் சேர்ந்தவை. முக்கியமாய்க் கங்குந்தி என்ற விடத்தில் விர்த்தியாகும் எருதுகளே அவை. பசுக்கள் பால் கறப்பதில் பேர்பெற்ற புங்கனூரி லிருந்து மிகுதியாக விருத்தி செய்யப்படும் சித்தூர் ஜில்லா புங்கனூர்ப் பசுக்களே இந்த ஜில்லாவில் அதிகம். ஆனால் இப்பொழுது அசல் புங்கனூர் மாடுகள் கிடைப்பது அரிது. சாதாரண ஆடுகளும், குரும்பாடுகளும் உண்டு காடுகளில் காட்டுக்கோழியும் ஆறுகளிலும் குளங்களிலும் அனேக விதமான மீன்களும் உண்டு.

இந்த ஜில்லாவில் தமிழ் தெலுங்கு இந்த இரண்டு பாஷைகளும் சமமாகவே பேசப்படுகின்றன. தெற்குத் தாலூகாக்களில் வழங்கப்படும் பாஷை தமிழ் வடக்குத் தாலூகாக்களில் பேசப்படும் பாஷை தெலுங்கு. பாலாறு இவ்வி வகை பாஷைகளைப் பேசும்படி ஜனங்களைப் பிரிக்கிறது. ஆயினும் தெலுங்கர்களுக்குள் தமிழ் கிராமங்களும், தமிழர்களுக்குள் தெலுங்கு கிராமங்களும் காணப்படு-