பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

21

மூர்க்க ஸ்வபாவம் வாய்ந்த ஜாதியார்கள். அவர்களது கொடிய குணத்தினால் தான் அவர்களுக்குக் குறும்பர்களென்ற பெயர் கொடுக்கப்பட்டதாம். நாட்டின் விஸ்தாரமான சமுத்திரக்கரையைக் கண்டு மற்ற ஜாதியார்களோடு வியாபாரம் செய்ய அது அனுகூலமான தெனத் தீர்மானித்துக் கர்னாடகப் பிராந்தியத்திலிருந்து வந்து இந்த வேடர்களை ஒடுக்கினார்களாம். முதல் முதல் அவர்களுக்கு யாதொரு அரசனும் ஏற்பட்டிருக்க வில்லை ஆயினும் பின்னர் அவர்களுக்குள்ளாக சண்டை சச்சரவுகள் நேர்ந்த காரணம் பற்றிக் கொமாண்டு குறும்பப் பிரபு என்ற ஒரு தலைவனைத் தெரிந் தெடுத்துக் கொள்ளும்படி நேர்ந்தது. இவன் தான் பல்லவ வமிசமென்று கூறப்பட்டுள்ள பரம்பரையின் அரசனென்றும் தெரிவிக்கப்பட் டிருக்கிறது. இவன் நாட்டை இருபத்து நான்கு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு கோட்டமென்ற பெயரிட்டழைத்தான் இக் கோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோட்டையையும் ஏற்படுத்தினதாகக் கூறப்பட்டுளது. அனைது ராச்சியம் வடக்கில் பழவேற்காட்டிலிருந்து தெற்கில் கூடலூர்வரைக்கும் பரவி யிருந்ததுடன் உள்பக்கத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைவரைகூடப் பரவி யிருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அவர்களது முக்கியமான கோட்டைகளுள் ஒன்று போளூர்த் தாலூகாவிலுள்ள படவேடு. மற்றவை பழைய கோட்டைகளா யிருந்திருக்க வேண்டும். மஹேந்திரவாடி, ஆம்பூர்ப்பேட்டை, நாராயணவரம், வள்ளிமலை முதலிய இடங்களில் கோட்டைகள் ஏற்பட்டிருக்கக் கூடுமென நினைக்கிறார்கள்.