பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வட ஆற்காடு ஜில்லா

பல்லவ மன்னர்களைப் பற்றித் தெரிந்திருப்பு தெல்லாம் மிகச் சொல்பமே. அவர்களது முக்கியமான துர்க்கம் செங்குன்று (Red Hills) எனப்படுமிடத்தின் அருகிலுள்ள புழலூர் காஞ்சீபுரம் என்ற விடத்தில் ஏற்பட்டு அவ்வூரே அவர்களது ராஜதானி நகரமாகவும் ஏற்படடிருந்ததாம். சமுத்திர மார்க்கமாக அயல் நாடுகளுடன் அவர்கள் ஏராளமான வியாபாரம் செய்து வந்திருந்ததாகத் தெரிகிறது. இவ்விஷயமும் சமுத்திரக்கரை யோரங்களில் எங்குமே பல்லவ நாணயங்கள் அகப்படுகின்றன என்றதுடன் ரோமாபுரி (Rome) சீனா (China) தேச தாணயங்களும் அகப்படுவதால் நன்கு ஊர்ஜிதப்படுகிறது. ஒரு ஜெயினமதப் பிரசங்கி இப்பிராந்தியங்களுக்கு வந்து ஜனங்களை அந்த மதத்தைத் தழுவும்படி செய்தனராம். பின்னர் காஞ்சீபுரம் அம்மதத்திற்குப் பேர்போனதாக ஏற்பட்டு அனேக ஜெயின சந்நியாசிகளது இருப்பிடமாக அவ்வூர் இருந்து வந்தது. இப்பொழுதும் அனேக ஜெயினர்கள் தென் ஆற்காடு ஜில்லாவிலும், இந்த ஜில்லாவின் ஆற்காடு, வந்தவாசி, போளூர் தாலூகாக்களிலும் இருந்து வந்தார்களாம். ஏழாவது நூற்றாண்டில் பல்ல்வ அரசர்களது அதிகாரம் மகா உன்னதமான நிலைமையி லிருந்தது. ஆனால் கொஞ்சகாலத்திற் கெல்லாம் கொங்கு, சோழமன்னர்கள் அவர்கள்மீது அனேகம் தடவைகளில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுளது. கடைசியாகக் குறும்பர்களை ஒடுக்கியது எட்டு அல்லது ஒன்பதாவது நூற்றாண்டில் சோழர்களே. தஞ்சாவூர் குலோத்துங்க மன்னனது மகன் தொண்டமான் சக்ர-