பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

23

வர்த்தி யென்ற ஆதொண்டை பல்லவ மன்னனை எதிர்த்து அவனுடன் கொடும் போர்புரிந்த விடம் காஞ்சிபுரத்திற்கு 10-மைல் தூரத்திலுள்ள புல்லலூர் என்று கூறப்பட்டுளது. இதில் குரும்பர்கள் வெற்றிபெற ஆதொண்டை சோளங்கி புரத்திற்கு (Sholingur) ஓடிவிட நேர்ந்தது. அங்கு அவன் கண்ட ஒரு கனவினால் தைரியம் கொண்டு மறுபடியும் தனதெதிரியை எதிர்த்து அவனது வீரர்கள் அனைவரையும் கொன்று வெற்றி பெற்றான். பல்லவ மன்னன் சிறை செய்யப்பட்டுப் புழலூர்க் கோட்டையின் பித்தளைக் கதவு தஞ்சாவூர் கோவிலுக்குக் கொண்டு போய்விடப்பட்டது. இவ்வெற்றிக்குப் பிறகு மற்ற குரும்பத்தலைவர்கள் சுளுவில் ஒடுக்கிவிடப்பட்டார்கள். பின் அவ்வமிசமே அழிந்து போயிற்றாம். இப்பொழுது மைசூர் பீடப்பூமிப் பிராந்தியங்களில் காணப்படும் அம்மரபினர்கள் குரும்பர்களென்ற பெயர்வாய்ந்து கால் நடைகள் மேய்த்தும் மட்டமான மோட்டாக் கம்பளங்கள் நெய்தும் ஜீவித்து வருகிறார்கள். மேற்குத்திக்கில் ஓடிப்போன சிலர் சொல்ப நாகரீகம் வாய்ந்துள்ளவர்களாய் நீலகிரி மலைச்சரிவுகளில் வசித்து வருகிறார்கள். ஏனாதிகளும், இருளர்களும் இம்மரபினர்களே யென்பது சிலர் அபிப்பிராயம்.

இப்பொழுது காஞ்சீபுரம் சோழ மன்னர்களது ராஜதானி நகரமாக ஏற்பட்டது. அந்த ராஜதானியும் கோதாவரி வரை பரவியிருந்தது. ஆயினும் சோழர்களது அதிகாரம் மறுபடியும் குன்றி அவர்களது ராச்சியமும் தமிழ் நாடுகளுக்குள்ளேயே ஒடுக்கி விடப்பட்டதாம். அங்கு அவர்கள் தெலிங்கனா, விஜயநகர மன்னர்களுடன் விட்டு-