பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வட ஆற்காடு ஜீல்லா

விட்டுப் போராடிக்கொண்டு வந்ததும் ஏற்படுகிறது. சோழ மன்னர்கள் அடிக்கடி கப்பம்கட்டும் மன்னர்களது நிலைமைக்கு வந்து விட்டார்களாம். ஏழாவது நூற்றாண்டின் இறுதியில் இவ்வமிசம் முடிவுபெற்று அதன் ஸ்தானத்தில் தற்காலத்திய தஞ்சாவூர் பரம்பரையை ஸ்தாபித்த பிரக்கியாதிபெற்ற மஹா ராஷ்டிர மன்னன் சிவாஜியின் சகோதரன் ஏற்பட்டான்.

சோழ மன்னர்கள் தெற்கு நோக்கித் துரத்தி விடப்பட்டதும் தெலிங்கனாவின் கீழண்டைப்பரசும் யாதவ வமிசத்தினர்களின் (Yadava Dynasty) கீழிருந்து வந்தது. கார்வேட் நகர ஜெமீன்தாரியில் நாராயணவரம் என்றவிடம் அவர்கர்களது ராஜதானி நகரங்களில் ஒன்றாக ஏற்பட்டிருந்ததென்பதையும், அவர்களது நாட்டில் திருப்பதியும், சந்திரகிரியும் முக்கியமான நகரங்களாக இருந்து வந்தன என்பதையும் தவிர்த்து இம்மரபினர்களைப்பற்றி நிச்சயமாகத் தெரியக்கூடியது ஒன்றும் இல்லை. அவர்கள் குரும்பர்களது பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருக்கினுமிருக்கலாம். ஏனெனில் அச்சாதியார்களது பெயரிலிருந்து அவர்களது தொழில் கால்நடைகள் மேய்ப்பதென்று தெரிகிறது. பீடபூமி வாசிகளாகிய குறும்பர்களது தொழிலும் கால் நடைகள் மேய்ப்பதே.

சுமார் பதினோராம் நூற்றாண்டில் முன்னுக்கு வந்தது பல்லால வமிசம் (Ballala). இவ்வமிசம் தமிழ் நாடு, கர்நாடகம், மலையாளம், தெலிங்கனாவின் ஒரு பாகம் இவைகளை ஆண்டு வந்திருக்கலாமெனத் தெரிகிறது. அதே காலத்தில் ஆந்திர அரசர்கள் கொஞ்சம் பிரசித்தி பெற்-