பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

25

றிருந்தனராம். ஆனால் அவர்களது ராச்சியம் தற்காலத்திய கர்நாடகம் வரை பரவியிருந்ததென்று கூறமுடியாது. அவர்கள் ராஜதானியின் பிரதான நகரம் ஹைதராபாத்துக்கு வட கிழக்கில் எண்பது மைல் தூரத்திலுள்ள வாரங்கல் (Warangal). அவர்களும், பெல்லால மன்னர்களும் பதினான்காம் நூற்றாண்டில் முகம்மதியர்களால் ஒடுக்கப்பட்டார்கள்.

இது முதல் தென் இந்திய சரித்திரம் ஒரு வாறு தெளிவு பொருந்தியுளதே. முகம்மதியர்களது படை யெழுச்சியில் முந்தியது 1293-வது வருஷத்தில் ஏற்பட்டது. அப்பொழுது மஹாராஷ்டிர மன்னன் ராமதேவ் (Ramdeva) என்றவனைக் கில்ஜி (Kbilji) வமிசத்தைச் சேர்ந்த அலாஉதீன் (Ala-ud-din) என்றவன் எதிர்த்து ஒடுக்கித் தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தான். தங்களது வெற்றிகளால் தைரியம் கொண்ட முகம்மதியர்கள் 1303-வது வருஷத்தில் தெலிங்கனாவைப் படையெடுத்துச் சென்றது பயன் படவில்லை. மூன்று வருஷகாலம் தெற்கு நோக்கி யாதொரு முயற்சியுமே செய்யாமல் இருந்ததைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்திருந்தார்களாம்.ஆனால் அதற்குப் பிறகு ராமதேவ் கப்பங் கட்டத் தவறிப்போன காரணம்பற்றி ஒரு முகம்மதிய சைனியம் மாலிக்காபர் (Malik Kafur) என்ற தளகர்த்தனின் கீழ் அவனை எதிர்த்துத் திரும்பவும் கீழ்ப்படியும்படி செய்தது. இந்த மாலிக்காபரும் ராமதேவனது ராஜதானியின் பிரதான நகரமாகிய தேவகிரி (Deogiri) யிலிருந்து தெலிங்கனாவின் பிரதான நகரமாகிய வாரங்கலுக்கும் சென்று அதையும் பிடித்-