பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வட ஆற்காடு ஜில்லா

துக்கொண்டு அதன் அரசனையும் கப்பம் கட்டும்படி செய்தான். வெற்றியுடன் கூடிய அவன் இன்னும் தெற்கு நோக்கிச் சென்று மைசூரின் பிரதான நகரமாக விருந்த துவாரசமுத்திரம் (Dvarasamudra) என்ற விடத்தில் பெல்லாலர்களது சைனியத்தைத் தோற்கடித்துக் கீழ் சமுத்திரச் கரை நெடுகஉள்ள பிராந்தியங்களை ராமேசுவரம்வரைக்கும் ஒடுக்கிவிட்டானாம். இவ்வெற்றிகளை அடைந்தபிறகு மாலிக்காபர் வடக்கு நோக்கித் திரும்பிச் சென்று விட்டனன்.

பத்து வருஷங்களுக்குள்ளாக மேற்கூறிய படை யெழுச்சியினால் ஏற்பட்டிருந்த மனோபாவம் குறைய ஆரம்பித்துத் தெற்கிலுள்ள ராச்சியங்கள் தங்களுக்கு வெகு தூரத்திற்கப்பாலுள்ள டெல்லி சக்கிரவர்த்திகளுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்திவிடத் துணிவுற்றார்கள். இக் காரணம்பற்றியே கயாஸ டின் தக்லாக் (Ghyas-ud-din) 1322-வது வருஷத்தில் தக்காணத்தில் தனக்குக் கீழ்ப்பட்டிருந்த மன்னர்களை பலாத்காரப்படுத்திக் கப்பம் கட்டும்படி செய்ய ஒரு சேனையை அனுப்பவேண்டி நேர்ந்தது. கலகம் செய்தவர்களுள் தலைவனாகலிருந்த வாரங்கல் அரசன் சிறை செய்துகொண்டு போகப்பட்டான்.

தென் இந்தியாவில் அரசாக்ஷி செய்து வந்த பரம்பரைகளுள் விஜயநகர மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களது ஐசுவரியமும், அதிகாரமும், பெருமையும் இப்பொழுது கூட நினைவில் இருந்து வருகின்றன. பெல்லால மன்னர்கள் ஒடுக்கப்பட்டதும் இந்த ராச்சியம் முதவில் தலைக்கிளம்பிற்று. புக்கராயன், ஹரிஹரன் (Bukka- raya and Harihara) என்ற இரண்டு தெலிங்கனா அரச-