பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

27

குமாரர்களால் ஈஸ்வரப்பிரஸாதம் பெற்றுக் கற்றறிந்த மாதவ வித்தியாரணியரால் (Vidyaraniya) உதவி செய்யப்பட்டு அது ஸ்தாபிக்கப்பட்டதெனக் கூறுகிறார்கள். இந்த மாதவ வித்தியாரணியரே அவர்களது பிரதான மந்திரியாகவும் ஏற்பட்டார்.

இந்த வமிசத்திற்குப் பெயர் இடப்பட்டதற்குக் காரண பூதமான ராஜதானியின் பிரதான நகரம் துங்க பத்திரா நதிக்கரையில் விஜய நகர மெனப்படும் ஹம்பி (Hampi)யிலிருந்தது. அங்கிருந்து தான் விஜய நகர அரசர்கள் பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலும், பதினாறாம் நூற்றாண்டில் சில காலத்திலும் பக்கத்திய மன்னர்களுடன் போராடி ஜெயம்பெற்றனர். 1344-வது வருஷத்தில் முகம்மத் பின் தக்லாக்கின் (Mahammad Tughlak) ஆட்சியில் அவர்கள் தெலிங்கனாவின் மன்னன், பாமினி அரசன் ஹஸன் காங்கூ (Hassan Gangu) இவர்களது உதவிகொண்டு தங்களது நாடுகளிலிருந்தும் முகம்மதியத் துருப்புக்களை அகற்றச் சக்தி வாய்ந்திருந்தார்கள். ஆனால் முகம்மதியர்கள் இழந்துபோன அதிகாரத்தைத் திரும்பவும் அடைய ஸதா முயற்சி செய்துகொண்டுவந்த காரணம் பற்றி அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் ஸதா சண்டைகள் ஏற்பட்டிருந்ததாம். விஜயநகர பரம்பரை யார்களது ராச்சியம் பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் அவர்களது ராஜதானிக் கருகிலுள்ள பிராந்தியங்கள் அடங்கியுள்ளதாகவே இருந்தது. பதினான்காவது அரசன் நரசிங்கராயன் காலத்தில் தான் அது கர்நாடகம் வரைக்கும் பரவி யிருந்ததாம். தனது முனனோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த