பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வட ஆற்காடு ஜில்லா

நாடுகளை நரசிங்கராயன் விஸ்தரிக்கச் செய்து வேலூர், சந்திரகிரி இவ்விடங்களிலுள்ள கோட்டைகளைக் கட்டியோ பலப்படுத்தியோ செய்ததாகக்கூறியுளர். அவனால் வேலூர் கோட்டை பழுதுபார்த்து ஒழுங்கு செய்யப் பட்டது. சிற்கில சமயங்களில் அதைத் தனது வாஸஸ்தானமாகக் கொள்வதற்கென்றும் சந்திரகிரிக் கோட்டையை பலப்படுத்தி அது கஜானாவை பத்திரமாக வைப்பதற்கென்றும் கூறியுளர். அவனது மகன் கிருஷ்ண தேவராயன் தனது தகப்பன் சேர்த்த நாடுகளை இன்னும் விஸ்தீரண முள்ளதாகச்செய்ததுடன் தமிழ்நாடு முழுவதையுமே ஒடுக்கினானாம்.

முகம்மதியர்களுடன் ஏற்பட்ட போராட்டத்தில் விஜயநகர மன்னர்களுக்கு நேசர்களாக ஏற்பட்ட பாமினி வமிசம் முகம்மத் துக்லாக் சக்கிரவர்த்தியினது கொடுமையை சகிக்கமாட்டாமல் குஜராத்திலிருந்து ஓடி வந்து விட்ட சில முகலாயர்களால் ஸ்காபிக்கப்பட்டது. அவர்கள் தௌலதாபாத் என்ற ஊரைப்பிடித்துக்கொள்ள அவர்களைப்போலவே துக்லக் (Tughlak) சக்கிரவர்ததியினால் கொடுமை செய்து ஓடி வரும்படி செய்யப்பட்ட இன்னும் அனேகர் உதவி செய்தார்கள். அவர்களெல்லாம் ஒருங்கு கூடி இஸ்மேல் கான் என்ற ஒரு ஆப்கானியனைத் தங்களது கலைவனாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த இஸ்மேல் கான் என்றவனும் சுவல்பகாலத்திற்கெல்லாம் தனது அதிகாரத்தை விஜயநகர மன்னனது நேசனாகிய ஹஸன் கங்கூ என்றவனிடம் ஒப்புவித்து விட்டான்.

ஜாதி, மதம் இவைகளில் முற்றும் வேறுபட்டிருந்த இரண்டு ராச்சியங்கள் நெடுங்காலம் ஒற்றுமையுடன் கூடி-