பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

29

யிருப்பது முடியாத விஷயம். ஆதலால் இருவரும் சத்துருவாக ஏற்பட்டது நிவர்த்தியானதும் பாமினி அரசர்கள் தெலிங்கனா, விஜயநகரம் இவைகளின் ஹிந்து ராஜாக்களுடன் நெடுங்காலம் சண்டையிட்டுக்கொண்டு வந்தார்கள். இதில் தெளிங்கனா, முற்றிலும் ஒடுக்கி விடப்பட்டது. தென் இந்தியாவில் பாக்கி நின்ற முக்கியமான பரம்பரைகள் பாமினி வமிசமுமே, இவ்விரண்டில் விஜய நகர வமிசம் பதினாறாம் நூற்றாண்டுக்குள் துங்கபத்திரை நதிக்குத் தெற்கிலுள்ள தேசத்திற் கெல்லாம் முக்கிய அதிகாரம் வாய்ந்திருந்ததாக ஏற்பட்டு விட்டது. மார்ஷ்மன் (Marshman) என்ற கனவான் அவர்கள் தெற்கிலிருந்த ஹிந்து அதிபதிக்கெல்லாம் மேல் அதிபதிகளாக ஏற்பட்டிருந்ததாகக் கூறியுளர்.

இரண்டு கரை ஓரங்களிலு மிருந்த அறுபது துறைமுகப் பட்டணங்களில் நடந்த வியாபாரத்தினால் கிடைத்த லாபத்தினால் அதிகரிக்கப்பட்டவர் தங்கள் அரசிறையைக் கொண்டு சேகரிக்கப்பட்ட படை அவ்வரசனை ஒண்டியாக வேறொரு ராச்சியமுமே எதிர்த்து ஜெயமடைய முடியாதென நினைக்குமாறு செய்த பாமினி ராச்சியத்தில் நேர்ந்திருந்த குழப்பமும் மேலே கூறியுள்ளவாறு ஏற்பட்ட வாரங்கல் நாட்டின் ஐசுவரியத்திற்கு ஒரு காரணமாயிருந்ததாம். ஹஸன் கங்கூ இருந்த பிறகு அது நாளடைவில் ஐந்து சிறு ராச்சியங்களாகச் சிதறுண்டு போய் அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அதிபதி ஏற்பட நேர்ந்தது. அவ்வதிபதிகளும் ஒருவரோ டொருவர் துவேஷமும் விரோதமும் பாராட்டிச் சண்டையிட்டுக் கொண்டுவந்தார்-