பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வட ஆற்காடு ஜில்லா

கள். பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி வமிசத்தின் சுல்தான்கள் எனக் கூறப்பட்ட ஐந்து அதிபதிகளும் பக்கத்து ராச்சியமாகிய விஜயநகரத்தின் அதிகார அபிவிர்த்தியைக்கண்டு பயந்தவர்களாய் ஒன்று சேர்ந்து அதை ஒடுக்கிவிடத் தீர்மானித்தார்கள். அவர்களது சைனியமும் ஒன்று கூட்டப்பட்டது. 1565-வது வருஷம் ஜனவரி மாதம் 23-ந்தேதி தென் இந்தியாவிலேயே விசேஷமான சண்டை தலைக்கோட்டை (Talikota) என்ற விடத்தில் நடந்தது. விஜயநகர ராணுவம் சிதறடிக்கப்பட்டு அதன் அரசன் ராமராயன் என்றவனும் கொல்லப்பட்டான் பிந்தி அந்த ராச்சியமும் சிதைவுண்டு போயிற்று.

ஜெயமடைந்த பாமினி வமிசத்திய சுல்தான்களும் தங்களுக்குள்ளாகவே ஏற்பட்ட பொறாமையாலும் அசூயையாலும் ஜெயித்த நாட்டைப் பிடித்துக் கொள்ள முடியாமல் போயிற்று. ஆதலால் தலைக்கோட்டைச் சண்டையினால் நேர்ந்த தெல்லாம் அதனால் சிதறுண்ட நாடு தற்காலத்தில் ஜெமீன்தாரிகள், பாளையங்கள் என்று கூறப்பட்டு ஜமீன்தாரிகள், பாளையக்காரர்கள் இவர்களது ஆதீனத்தின் கீழிருக்கும். முந்தி ராஜவமிசத்தினர்கள் சர்க்கார் அதிகாரிகள் இவர்கள் ஸ்வாதீனப்பட்டு ஆண்டுவந்திருந்த பிரிவுகளாக ஏற்பட்டதே ஒழிய வேறில்லையாம். சிதறுண்ட மேற்கூறியுள்ள பாகங்கள் ஒன்றிற்குக் கொல்லுண்ட அரசன் சகோதரன் ஒருவன் அதிபதியாக ஏற்பட்டு அனந்தபுரம் ஜில்லாவிலுள்ள பேணுகொண்டா (Penukonda) வில் சில காலமிருந்த பிறகு அவன் தனது கச்சேரியைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டான். இங்-