பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வட ஆற்காடு ஜில்லா

போய்விட்டன. பதினைந்தாவது நூற்றாண்டின் இறுதியிலும் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அந்நாட்டைப் போய்ப் பார்த்திருந்தவர்கள் அதன் மகிமையும் ஐசுவரியமும் வியக்கத்தக்கவையா யிருந்தன என்று சொல்கிறார்கள். அனேக பெரிய ஐசுவரியம் வாய்ந்த நகரங்களிலிருந்து உற்பத்தியான கைத்தொழில் பொருள்கள் உலகத்தில் அதிக தூரத்திலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரப்பட்டன. விவசாயமும் ஏராளமாக நடை பெற்று வந்தது. பற்பல துறைமுகப் பட்டணங்களிலும் பலத்த வியாபாரம் நடைபெற்று வந்தது. முரட்டு ஸ்வபாவம் வாய்ந்திருந்த நாட்டின் பற்பல சிற்றதிகாரிகளை அடக்கி வைத்துக் கொண்டு தலைவன் போனதும் நாடெங்கும் கொள்ளை முதலியன ஏற்பட்டுப் பாழடைந்து ஸதா ஏற்பட்டுக் கொண்டிருந்த சண்டையால் பயிர் செய்பவர்கள் அமைதியுடன் உழுது பயிர் செய்யவும் முடியவில்லை. பகீரதப்பிரயத்தினத்துடன் பயிர் செய்யப்பட்டு மாசூலை அடையவும் முடியவில்லை. அனேக வருஷங்களுக்குப் பிங்தித்தான் ஜெமீன்தாரர்களையும், பாளையக்காரர்களையும் கட்டுக்கடங்கி நிற்கும்படி செய்யக்கூடிய அதிகாரம் ஏற்பட்டு நாடும் படிப்படியாக க்ஷேமத்திலும் ஐசுவரியத்திலும் விர்த்தியாகிக் கொண்டு வந்தது.

தலைக்கோட்டைச் சண்டைக்குப் பிறகு எழுபது வருஷகாலம் விஜயநகர ராச்சியம் க்ஷீணித்ததால் ஏற்பட்ட அனேகச் சிற்றதிபதிக்குள் சண்டையும் சச்சரவும் ஸதா ஏற்பட்டுக் கொண்டேவந்து நாட்டின் அமைதியும் க்ஷேமமும் குன்றிப் போயிருந்தன. அதற்குப் பிறகு பலம்