பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

33

குன்றி ஒற்றுமையின்றிச் சண்டைச் சச்சரவுகள் செய்து கொண்டிருந்த இச்சிறு ராச்சியங்களை ஜெபிப்பது எவ்வளவு எளி தென்று பீஜப்பூர் அரசனுக்குத் தெரிந்ததும் அவன் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முயன்றான். பாமினி ராச்சியம் சிதறுண்டிருந்த ஐந்து பாகங்களில் ஒன்றை அவன் ஆண்டு கொண்டிருந்தான். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவன் சுயேச்சை பெற்று அது முதல் அடிக்கடி முகலாயர்களுடன் போராடிக் கொண்டுவர நேர்ந்திருந்தது. பாமினி ராச்சியம் சிதறுண்டதும் ஏற்பட்ட மற்ற ராச்சியங்களுள் ஆமத் நகரம் கோல்கொண்டா என்றவை இரண்டு. அவைகளும் பக்கத்திய பீஜப்பூர் ராச்சியத்தைப் போலவே ஒருவருக்கொருவர் அசூயை காட்டிக் கொண்டுவந்தார்க ளென்றதுடன் முகலாயர்களுடனும் போராடிவரும்படி நேர்ந்திருந்தது. இந்தப் பரஸ்பர அசூயையும் போராட்டமும் அவர்கள் தங்களது கவனத்தைத் தெற்கு நாடுகளில் செலுத்த இடம் கொடுக்கவில்லை. ஆதலால் மிக்கச் செழுமைவாய்ந்த பிராந்தியங்களாகிய அவைகள் பலம் பொருத்திய ஒருவனுக்கு எளிதில் வசப்படக்கூடிய நிலைமையிலிருந்தன. 1636-வது வருஷத்தில் ஷாஜகான் சக்கிரவர்த்தியின் படை யெழுச்சி முடிவு பெற்ற உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு பீஜப்பூர் சுல்தான் தனது ராச்சியத்தைத் தெற்கில் அதிகரிக்கச் செய்ய அதிகாரமும் அவகாசமும் ஏற்பட்டது. ஆமத்நகர அதிகாரம் குலைக்கப்பட்டு பீஜப்பூர், கோல்கொண்டா மன்னர்கள் கூடியமட்டும் சுயேச்சை பெற்று அடுத்த இருபது வருஷ காலம் கர்நாடகத்தில் போர்புரிந்து

3