பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வட ஆற்காடு ஜில்லா

வரக்கூடிய நிலைமையில் இருந்து வந்தார்கள் அவர்கள் அப்படிப் போர்புரிந்துவந்த போதிலும் ஒத்துழையாது ஒவ்வொருவரும் தன் தன் நாட்டுக் கருகிலிருந்த பாளையக்காரர்களை ஒடுக்கத் தலைப்பட்டார்கள். இதனால் அங்கங்கிருந்த சிறு சிறு ராச்சியங்கள் இவர்களது அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. வேலூர், பீஜப்பூர் அரசன் வசப்படச்,சந்திரகிரி கோல்கொண்டா மன்னனால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களுக் கேற்பட்ட வெற்றி நாளடைவில் சக்கிரவர்த்தியின் அசூயையைக் கிளப்பிற்று. ஆதலால் அவர் காலதாமதமின்றிப்பெயருக்கு மாத்திரமே தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக ஏற்பட்டிருந்த இவர்களது பலத்தைக் குறைக்க முயன்றார்.

1656- வது வருஷத்தில் பீஜப்பூர் சுல்தானாகிய அடில் ஷா (Adil Shah) இறந்து போனான். அவனது மகனும் அறிவீனத்தால் ஸம்பிரதாயப்படி செய்ய வேண்டிய மரியாதையைத் தான் சக்கிரவர்த்திக்குப் பட்டத்திற்கு வந்ததும் செய்யத் தவறிப் போனான். ஆதலால் ஷாஜஹான் அவன் இறந்து போனவனது நியாயமான மகன் அல்ல வென்று கூறச் சக்கிரவர்த்தியின் மகன் கீழ் ஒரு முகலாய சைனியம் புறப்பட்டுச் சென்று திடீரென்று பீஜப்பூர் ராச்சியத்தை அடைந்தது. அந்த ராச்சியத்தின் படையில் பெரும்பாகம் கர்நாடகத்திலிருந்த காரணம்பற்றி விஷயம் நன்மையைத்தர தக்கதாக விருக்கவில்லை. பீஜப்பூரின் மகிமையும் அதிகாரமும் குன்றியே போயிருக்கும். ஆயினும் சமய சஞ்சீவிபோல் சக்கிரவர்த்தி சாகுந் தருவாயிலிருப்பதாகச் சமாசாரம் வந்தது. ஔரங்கசீப்பும் கொஞ்ச