உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

35

மேனும் முற்றுரையை நீக்கிச் செல்ல மனமிராம லிருந்த போதிலும், தகப்பனது ராச்சியத்தைத் தான் அடையத் திரும்பிச் சென்றுவிட நேர்ந்தது. இவ்வாறு பீஜப்பூர் அரசனுக்குத் தனது ராச்சியத்தை ஒருங்கு கூட்டி விஸ்தரிக்கச் செய்ய முப்பது வருஷ அவகாசம் ஏற்பட்டதாம்.

இனி தென் இந்தியா சரித்திரத்தில் சம்பந்தப்பட்டது மஹாராஷ்யயர்களது விஷயம். இந்த மவஹாராஷ்டிர வமிசமும் சிவாஜியினது வமிசம், மல்லோஜீ பான்ஸலே என்ற குதிரைவீர அதிபதி கொள்ளையடித்து ஏராளமான பொருளைச் சேர்த்துக்கொண்டு பதினேழாம் நாற்றாண்டின் ஆரம்பத்தில் பூனாவில் சில ஜாகீர்களையும் இன்னம் சில நாடுகளையும் ஆமத்நகர சுல்தானிடமிருந்து வாங்கிக் கொண்டான். இவன் இறந்த பிறகு இந்நாடுகள் இவனது மகன் ஷாஜிக்குக் கிடைத்தன. இந்த ஷாஜி 1636-வது வருஷத்தில் அப்பொழுது உன்னதமான பதவியிலிருந்த பீஜப்பூர் சுல்தான் கீழிருப்பது நலமெனக்கருதி அனுமதி வேண்டியது அளிச்கப்பட்டது. கர்நாடக படை யெழுச்சி ஒன்றில் இந்த ஷாஜி அனுப்பப்பட்டு அதில் பிரக்கியாதிபெற்ற காரணம் பற்றி இவனுக்கு பெங்களூருக் கருகில் அனேகம் சிறந்த ஜாகீர்கள் அளிக்கப்பட்டன. இந்த ஜாகீர்கள் பூனா ஜாகீர் முதலானவைகளை விடச் சிறந்தவைகளாக விருந்தகால் இவைகளைத் தான் வைத்து அந்த ஜாகீர்களைத் தனது மகன் சிவாஜி பேருக்கு மாற்றிவிட்டான். பூனா ஜாகிருடன் தனக்கு வந்த அதிகாரத்தை சிவாஜி மிகத் துணிகரமான கொள்ளை முதலிய தீய விஷயங்களில் செலுத்தி வந்த காரணம்பற்றி ஷாஜியின் ரக்ஷகன் அவளைப்பிடித்து அவனது