பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வட ஆற்காடு ஜில்லா

மகனது நன்னடத்தைக்கு ஜாமீனாக வைத்துக்கொள்ளப் பட்டான். நான்கு வருஷகாலம் ஷாஜி பீஜப்பூரில் சிறை செய்து வைக்கப்பட்டிருந்தான். அதனால் அவனது மேன் பார்வையில்லாமல் போயிருந்த கர்நாடக ராச்சியங்கள் சீர் குலைந்து போயிருந்தது தெரிந்ததும் அவனை விடுதலை செய்து அதிகமான அதிகாரமும் அளித்து அங்கனுப்பும்படி நேர்ந்தது. அவன் 11664- வது வருஷத்தில் இறந்து போகும் முன் பெங்களூரைச்சுற்றியிருந்த ஜாகீர்களைத் தவிர்த்து நாட்டின் தென் பாகத்தில் இன்னம் அநேகம் ஜாகீர்களையும் பெற்றிருந்தான். தகப்பனார் சிறையிலிருந்த காரணம் பற்றிக் கொஞ்சம் அடங்கியிருந்த சிவாஜியும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் முன்போல் கொள்ளையடித்து வட தக்ஷணத்தில் பெரும்பாகத்தில் தனது அதிகாரத்தை ஏற்படுத்திக்கொண்டான். மிக்க துரிதமாக இவனது அதிகாரம் விர்த்தியாகிக் கொண்டு வந்ததால் 1674- வது வருஷத்தில் இவன் சுயேச்சை யடைந்து ராஜபட்டம். இன்னம் முதலியன தரித்துக்கொள்ளக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டான்.

இதற்குப் பத்து வருஷத்திற்கு முன் இந்த சிவாஜியின் தகப்பன் ஷாஜி இறந்து போயிருந்தான். அவனது தென் நாடுகளிலிருந்த ஜாகீர்கள் சிவாஜியினது மாற்றாந்தாயின் குமாரனாகிய வெங்காஜி என்றவன் வசப்பட்டிருந்தன. அவனும் அவைகளை பீஜப்பூர் மன்னன் கீழ்ப்பட்ட மன்னனாகவிருந்து ஆண்டு வந்தான். சிவாஜி அநநாடுகளை வெங்காஜியி னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறதென்ற துணிகரமான எண்ணங் கொண்டான். இந்த நோக்கத்-