பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

37

துடன் இவன் கோல்கொண்டா சுல்தானோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். அவ் வுடன்படிக்கையின்படி கோல்கொண்டா சுல்தானும் சிவாஜி பீஜப்பூருக்குக் கீழ்ப்பட்டிருந்த நாடுகளை கோல்கொண்டா அரசனுக்காக ஜெயிக்கக் கர்நாடகத்திற்குச் சென்றிருக்கும் சமயத்தில் வடக்கிலுள்ள அவனது நாடுகளைக் காத்து ஒப்புவிக்க ஒத்துக் கொண்டான். சிவாஜி கோல்கொண்டா அரணுக்காக நாடுகளை ஜெயிக்கப்போவதாகக் கூறியது அவனுடன் நட்புக் கொள்ளக் கபடமாகக் கூறிய விஷயமே ஒழிய உண்மையான கருத்துடன் சொன்ன பேச்சல்ல. வாஸ்தவத்தில் சிவாஜியின் கருத்து தென்நாடுகளைக் தனக்காகவே ஜெயித்துக் கொள்ள வேண்டும் என்பதே.

இவ்வாறு தனது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டு சிவாஜியும் 1676- வது வருஷத்தில் வெங்காஜியி னிடமிருந்து நாடுகளைப் பிடுங்கிக் கொள்ள இந்த ஜில்லாவிலுள்ள கல்லூர் கணவாயின் வழியாகக் கர்நாடகத்தில் பிரவேசித்தான். கஷ்டங்களை அனாயாசமாய்ச் சகிக்கக்கூடிய அடங்காப் பிடாரிக்ளெனக் கூறக்கூடியவர்க வடங்கியுள்ள சைனியத்துடன் சிவாஜி வேலூர், செஞ்சி முதலான விடங்களிலிருந்த வெங்காஜியின் கோட்டைகளை ஒவ்வொன்றாய்ப் பிடித்துக் கொண்டு வந்தான். இதற்குள் இவன் தனது நண்பன் கோல்கொண்டா அரசனது உதவிக்காகத் துரிதமாய்ச் செல்ல நேர்ந்ததால் தான் பிடித்துக்கொண்ட இடங்களை சந்தாஜி என்றவனிடம் ஒப்புவித்து விட்டுச்சென்றான். ஆனால் இவனிடமிருந்த சைனியம் சுவல்பமாக விருந்ததால்