பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வட ஆற்காடு ஜில்லா

அவ்விடங்களை வெங்காஜி சுளுவில் திரும்பவும் தன் வசப்படுத்திக்கொண்டு விட்டான். கடைசியாக சிவாஜி அந்நாடுகளை வெங்காஜியே வைத்துக்கொண்டு அரசிறையில் பாதி தனக்குக்கொடுத்து விடுகிறதென்ற உடன்படிக்கையும் செய்துகொண்டான்.

நாளுக்குநாள் பலத்தில் அதிகரித்துக்கொண்டு வந்த இந்த சிவாஜியை ஒடுக்க முகலாயசக்கிரவர்த்தி முயன்றான். ஆனால் சிவாஜியும் மிகக் கபடத்துடன் வேலைசெய்து சமாளித்துக் கொண்டான். சிவாஜி இறந்தபிறகு ஏற்பட்டிருந்த மஹாராஷ்டிர ராச்சியத்தை இங்கிலீஷ்காரர்கள் நாளடைவில் தங்கள் வசப்படுத்திக்கொண்டார்கள். பிந்தி கர்னாடக யுத்தம் நேர்ந்தபொழுது அதில் இங்கிலீஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தலையிட்டுக்கொள்ள பிரெஞ்சுக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு இங்கிலீஷ்காரர்கள் படிப்படியாய் பலம்வாய்ந்து ராச்சியங்களைச் சேர்த்துக்கொண்டதுபோல் இந்த ஜில்லாவும் கர்னாடக சுபேதார் அசீம்உல் உமாராவால் (Azim-ul-Umara) 1801-ம் வருஷத்தில் ஜூலை 31-ல் கொடுபட்டு அவர்கள் வசப்பட்டு அதுமுதல் அவர்களால் இப்பொழுதும் ஆளப்பட்டு வருகிறது.