பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

43

வேலூர்க் கோட்டையை கிருஷ்ணா நதியின் கரையிலுள்ள பத்திராசலத்து பொம்மி ரெட்டி என்றவன் கட்டி முடித்ததாக ஏற்பட்டிருக்கிறது. அவனும், தீம்மி நாயுடு என்றவனும் அவ்வூரைச் சேர்ந்த யாதவ நாயுடு என்றவனது குமாரர்கள் என்றும், அவர்களது மாற்றந் தாயின் குமாரர்களுக்கு பயந்து ஊரை விட்டு ஓடிப்போன அவர்கள் ராமேசுவரம் முதலிய புண்ணியஸ்தலங்களை தரிசித்துப் பின்னர் வேலப்பாதி என்ற இடத்தில் தங்க நேர்ந்தது. அப்பிராந்தியம் அவர்களுக்கு ரமணீயமானதென்று ஏற்பட வேலூருக்கு ஐந்து மைல் தூரத்தில் கைலாஸ பட்டணம் என்ற இடத்திலிருந்த கரிக்கால் சோழனிடம் அவர்கள் அங்கு தங்க அனுமதி பெற்று ஆடு மாடுகள் விருத்தி செய்து தனிகர்கள் ஆனார்கள். இறுதியில் ஆரணியில் தலைவனாக இருந்த ஒருவன் அவர்களை எதிர்த்தான். ஆனால் அவன் முற்றும் தோற்கடிக்கப் பட்டதால் சந்தோஷம் கொண்ட மன்னன் அந்த பொம்மி ரெட்டிக்கு அனேகம் வெகுமதிகளும், ஸவதந்திரங்களும் அளித்தான்.

இந்த பொம்மி ரெட்டி என்றவன் வேலூர்க்கோட்டையையும் கோவிலையும் கட்டிமுடித்ததாக ஏற்பட்டுள்ள கதை விசித்திர மானது. அவனுக்கு ஐந்து முலைகளுடன் கூடிய ஒரு பசு எப்படியோ கிடைத்திருந்ததாம். ஒரு நீர் ஊற்றின் மத்தியி லிருந்த புற்றில் வகித்துவந்த ஒரு ஐந்து தலை நாகத்திற்கு அது பாலூட்டினதை அவன் ஒரு சமயம் பார்த்தானாம். சிவபிரானே நாகமாய் வடிவெடுத் திருந்தாராம். அவர் பொம்மி ரெட்டிக்குக் கனவில் தோன்றி, அங்கு பூமியில் ஏதோ ஓரிடத்தில் புதைய லிருந்ததாகவும், அதை