பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

61

செய்து அதில் தனது புருஷனது கர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய ஜலம் கொண்டுவருவாள் ! ஒரு நாள் அவள் அச்சுனைக்கு வழக்கப்படி தீர்த்தம் கொண்டுவரச் சென்ற பொழுது அங்கு ஆகாயமார்க்கமாய்ச் சென்ற மிக்க அழகுவாய்ந்த கந்தர்வன் ஒருவனைக் காண அவள் அவன் அப்படிச் சென்றதும் அவளது பதவிரத தர்மத்திற்கு பங்கம் ஏற்பட முன்போல் ஜலத்தைக் கொண்டு குடம் செய்து கொள்ள அவளால் முடியாமல் போயிற்று. இதை அறிந்த ஜமதக்நி கோபமூண்டு தனது குமாரன் பரசுராமனைக் கூப்பிட்டு அவனது தாயின் தலையை சேதிக்குமாறு கட்டளை யிட்டார். பரசுராமரும் அக்கட்டளையைச் சிரமேற் கொண்டு தனது தாயாரது தலையைச் சேதித்துப் பிதாவின் கட்டளையை நிறைவேற்றியதால் திருப்தியடைந்த ஜமதக்கியும் அவரைப்பார்த்து யாது வரம் வேண்டு மென அவர் தனது தாயார் உயிர் பெற வேண்டு மெனக் கேட்டார். ஜமதக்கியும் அவ்வாறே தனது அற்புத சக்தியால் கொஞ்சம் ஜலத்தை உபயோகித்து அவளை உயிர்ப்பித்தார்! ஆனால் பரசுராமர் தான் தனது தாயாரைக் கொல்லப் போன பொழுது தடுத்த ஒரு பறைச்சியையும் கொன்றிருந்த்தால் அங்குகிடந்த முண்டங்களையும் தலைகளையும் ஒன்று சேர்த்த போது தவறாகத் தனது தாயாரின் தலையைச் சண்டாள ஸ்திரீயின் உடலுடனும் சண்டாள ஸ்திரீயின் கலையைத் தனது தாயாரின் உடலுடனும் சேர்த்துவிட்டார். உயிர்பெற்ற இரண்டு ஸ்கிரிகளுள் யாரைத் தனது தயாராகக் கருதுவதெனத் தெரியாது தயங்கின பரசுராமரைப் பார்த்து ஜமதக்கியும்