பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

63

மஹா மாரி அம்மன் என்று ஜனங்களால் பூஜிக்கப்படும் தேவதையாம். பெரியம்மை வந்தவர்களின் மீது இந்த அம்மன் வந்திருப்பதாகவும் அந்த அம்மைக் கொப்புளங்கள் சொஸ்தமாக வேப்பிலை ஒன்றேதான் மருந்தென்றும் கூறுகிறார்கள். இந்த அம்மனுடைய சிலை தலை மட்டுமேயுள்ளது. ஏனெனில் இந்த அம்மனது தேகத்தின் முண்டம் ஒரு பரஸ்திரீயினது தேகத்தின் முண்டமென்ற காரணம்பற்றியே போலும் இச்சம்பவங்கள் நேர்ந்த காலத்தில் படை வீட்டில் ஊரும் ஏற்பட்டிருக்க வில்லை. யாதொரு கோவிலும் ஏற்பட்டிருக்கவில்லை.

அயோத்தி சூரிய வமிச அரசர்களில் ஒருவனாகிய வீரஸ்வான் என்றவன் தான் இவ்வூரையும் கோவில்களையும் கட்டி வைத்தனனாம். ஒரு அரக்கனால் பீடிக்கப்பட்ட இவ்வரச குமாரன் வசிஷ்ட மகரிஷியை அணுகித் தான் யாதொரு இடையூறு மின்றித் தவம்செய்ய ஓரிடத்தைக் காட்டும்படி வேண்டிக்கொள்ள வசிஷ்டரும் இப்படை வீட்டின் சரித்திரத்தை எடுத்துக்கூறி அங்கு செல்லலாமெனத் தெரிவிக்க அவனும் அங்கு வந்து தங்கினனாம். அவனுக்குப்பிறகு அவனது மகன் ஹரிஹரனும் பேரன் ஹெமமாலி யென்றவனும் அங்கு மிகச்சிறப்புடன் ஆண்டிருந்தார்கள். இந்நகரம் அழிந்து போனதற்குக் காரணம் ஹனுமாரது சாபமேயாம். ராம ராவண யுத்தம் நடந்தபொழுது ராவணன் பிரார்த்தித்துக் கொண்டதால் இப்படைவீட்டுத் தேவி அவனது உயிரைப் பத்மஸரஸில் புஷ்பித்திருந்த ஒரு தாமரை மலரில் வைத்து அவனுக்கு உதவி புரிந்தாள். அம்-