பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

வட ஆற்காடு ஜில்லா

மலரைக் கொண்டுபோக ஹனமார் முயன்றபொழுது அந்த தேவி தடுத்து அவரைச் சபித்ததால் அவருக்குக் கோபம் உண்டாயிற்று. ஆதலால் அவரும் அந்நகரம் அழிந்து போகக்கடவதென்று பிரதி சாபம் இட்டார். அவ்வம்மன் ஸ்ரீராமரிடம் விஷயங்களை முறையிட்டுக்கொண்டதன் மேல் அவள் ராவணனைத் தன்னிடம் ஒப்புவித்தால் சாபத்தின் உக்கிரத்தைக் குறைப்பதாகக் கூறினார். அப்படி மாற்றப்பட்ட சாபம் இந்தப்படை வீடு பத்தாயிரம் வருஷம் அழிபடாமலிருந்து பாவியாயும் துன்மார்க்கனாயுமிருந்த நந்தன் என்ற அரசன் ஆள வந்ததுமே க்ஷீணிக்கத் தலைப்படும் என்றதே. அவ்வரசனது துர்நடத்தையின் காரணமாக அவ்வூர் மண்மாரியினால் நாசப்படுத்தப் பட்டதாம். ஸ்ரீராமரும் இந்த ஊர் தேவதையின் பக்கம் அமர்ந்திருக்குமாறு ஏற்பட்டு இவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுளது. ஸ்ரீராமரது அறிகுறியாக 'ஸ்ரீராம தீர்த்தம்' என்ற ஒரு புண்ணிய தீர்த்தமும் இங்குளது.

துன்மார்க்க அரசனாகிய நந்தனைப்பற்றி அனேகம் கதைகள் ஏற்பட்டிருக்கின்றன. நந்தன்படைவீடென்ற பெயர் இதற்கு அவனாலேயே ஏற்பட்டதாம். உத்துங்க ராஜனென்றவனது மகனாகிய இவன் மிகக் கொடியவனும் கெட்டவனுமாக விருந்தான். குரும்பர்களது ஜெயத்திற்குப்பிறகு இவன் பக்கத்திலுள்ள அரசனாகப் படை வீட்டில் ஏற்படுத்தப்பட் டிருக்கினும் இருக்கலாம். உத்துங்கனும் பிரக்கியாதி பெற்ற குலோத்துங்க சோழ மன்னனேயாம். வேலூர்த் தாலூகாவிலுள்ள விரிஞ்சிபுரத்துச் சிலா லிகிதங்களி லிருந்தும், படை வீட்டிலேயே ஏற்பட்டுள்ள