பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

65

சிலாலிகிதங்களி லிருந்தும் இப்படை வீடு தொண்டை மண்டல நாட்டில் சேர்ந்திருந்ததென்ற விஷயம் ஏற்படுகிறது.

தக்கோலம் (Takkolam) :- தக்கோலம் அரக்கோணத்திலிருந்து செங்கற்பட்டு செல்லும் தென் இந்தியக் கிளை இருப்புப்பாதையில் ஒரு ரயில் ஸ்டேஷன். இது அறக்கோணத்திற்கு ஏழு மைல் தென் கிழக்கிலுள்ளது. இவ்வூருக்குப் புராணங்களில் "ஊறல்" என்றும் "நந்தி தீர்த்தம்" என்றும் பெயர். இவ்விடத்திலுள்ள நந்தி தேவரின் வாயிலிருந்து அகோராத்திரம் ஜலம் பெருகுவது ஒரு விசேஷம்! ஆனது பற்றித்தான் இதற்குத் திரு ஊறலெனப் பெயருண்டாயிற்று. பெரிய புராணம் இதைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறது:-

"நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடி மேல்
:மாறில்கங்கைதா னவர்க்குமஞ் சனந்தர வணைந்தே
ஊறுநீர் வருமொளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை"

இந்த க்ஷேத்திரம் விருத்தக்ஷீர நதி எனப்படும் குசஸ்தலை நதியின் கரையிலுள்ளது. இவ்விடத்தில் தான் சுரர் குருவுக் கிளைய முனிவனான சம்வர்த்த ரிஷி ஈஸ்வரனைப் பூஜித்து அருள் பெற்றனராம்.

முன்னர் இது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மணயில் கோட்டத்து பந்மா நாட்டைச் சேர்ந்திருந்தது இவ்விடத்தில் தான் கி.பி. 949 (சகம் 8:1)யில் இந்த தேசத்தைத் தென் ஆற்காடு ஜில்லாவிலுள்ள ராஜாத்திய புரமெனப்படும் திருநாமநல்லூரிலிருந்து கொண்டு ஆண்ட