பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரண சுயேச்சை 1937-ல் முளைத்தது இது தேசிய முன்னணி மூலமே பூரண சுயேச்சை அடைவது எண்ணம் பொதுப்படையாகப் பொ ருந்த காலம் இந்தக் காலம். பூரண சுயேச்சைநம் தேசம்எய் திடுமாறு போர்முர சடிக்க வேண்டும். புன்நெறிகொள் ஏகாதி பத்தியமோ டுறவுசெய் போக்கைப் பழிக்கவேண்டும். சாரமில் லாதபுது அரசிய லெனும் அடிமைச் சாசனம் உடைக்க வேண்டும் ஜனநாய கத்திற்கு முரணான சட்டங்கள் தம்மைத் தகர்க்க வேண்டும் ஈரமில் லாதோர் ஆட்சிமுறை யால்சிறை இருக்கின்ற தோழ ரெல்லாம் எத்தகை நிபந்தனையு மின்றிவிடு தலைபெற்ற் கேற்றதொண் டாற்ற வேண்டும் ஊரறிய நாடறிய உலகறிய நம்கொள்கை உறுதிபெற வாழ வேண்டும். ஓர்மையாய் தேசீய முன்னணி படைப்பதில் ஒன்று படுவீர் தோழரே.

96

96