பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றைக்குச்‌ சுதந்திரம்‌? இது சுதந்திரம்‌ பற்றிய ஒரு கோண வீச்சு. விடுதலை வேட்கையின்‌ ஒரு குறிப்பிட்ட மாதிரியான எதிரொலி, பேத உணர்வுகள்‌ அடிமைத்தனத்தைத்‌ தாங்கிநிற்கும்‌ களாக அமைவதை இந்தப்‌ பாட்டு . வெளியிடுகிறது. பிறந்தது 1939-ல்‌.

தூண்‌ இது

பல்லவி

என்றைக்குச்‌ சுதந்திரம்‌ வருமோ--ஏழை இந்தியர்‌ துயரங்கள்‌ அறுமோ

(என்றை)

அனுபல்லவி கன்றைப்‌ பிரிந்து நாளும்‌ கதறும்‌ பசுபோல்‌ வாடி, ஒன்றுக்கும்‌ வழியின்றி உழலும்‌ மனிதர்‌ கோடி (என்றை) சரணம்‌

சாதிகள்‌ மதங்களால்‌ சதிகார பேதத்தால்‌

தாழ்வு உயர்வுபேசும்‌ சழக்கர்‌ அநீதத்தால்‌

நீதிநெறியு மின்றி நிட்டூரத்‌ துக்குள்ளானோம்‌

நீள்நிலத்தில்‌ யாவர்க்கும்‌ கீழ்நிலைப்‌ பட்டுப்போனோம்‌

(என்றை),

103

103