பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற வேண்டாம் ஏமாந்திட வேண்டாம் இந்தியத் தோழரே தோழரே தோழரே தோழரே - இன்னும் சாமி கிருபையென்று தவமிருந்தே யுழன்று சேமித்த நன்மை பூச்சியம் பூச்சியம் பூச்சியம் பூச்சியம்-இன்னும் (ஏமாந்) கோவில் குளங்களாலே கொள்ளைபோச் சானதா லே ஆவி சோர்ந்திங்கு நைகிறோம் நைகிறோம் நைகிறோம் நைகிறோம் இன்னும் (ஏமாநீ) சடங்குகளால் இத்தேசம் சார்ந்தது சர்வநாசம் மடங் கொண்ட வாழ்க்கை போதுமே போதுமே போதுமே போதுமே- இன்னும் (ஏமாந்) 109 (ஏமாந்)

(1985)

109