பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மைப்‌ பிடித்த சனி (கட்ட பொம்மன்‌

மெட்டு)

நம்மைப்‌ பிடித்த சனிதெரிவோம்‌
நாட்டின்‌ மெளடீகம்‌ கொலைபுரிவோம்‌
பொம்மை மனிதர்சொல்‌ புண்ணியநாடு
பூவினில்‌ நாம்வாமும்‌ இந்தியநாடு.

கைம்மையில்‌ நீறுவோர்‌ கோடியுண்டு
கஞ்சிக்குச்‌ சாவோர்கள்‌ கோடியுண்டு
செம்மை வளர்ச்சி

இந்நாட்டி லில்லை

சீர்குலைந்து மக்கள்‌ வாடக்கண்டோம்‌.
சாதீயச்‌ சாக்கடை நாற்றங்கண்டார்‌

தலைக்கொரு பாழ்மதம்‌ சார்ந்துகொண்டார்‌

ஆதி அனாதியைப்‌ பா டி நின்றார்‌

அறிவைத்‌ தகைத்து புதுமைகொன்றார்‌.

போதும்‌ போதுமென்ற வியா தியுற்றார்‌
புழுவிற்‌ கடைப்பட்ட வாழ்வுபெற்றார்‌
மேதினி கண்ட கொடுமையிலே
மெத்தஉண்‌ டிந்தியா தேசத்திலே.

கோவில்‌ குளங்கள்‌ மலிந்துபோச்சு

குள்ளப்‌ புரோகிதர்‌ கொள்ளையாச்சு
ஆவி துடிக்கும்‌ மனிதருக்கே
“ஆண்டான்‌ அருட்பேச்சு வீண்மயக்கே.
118

118