பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவிக்கும்‌ பக்தரோ கோடிகோடி

செத்து மடிகின்றாரே திண்டாடி
பாவம்‌ கர்மமென்று ஓலமடா

பாரில்‌ நம்நாட்டிலே கேட்குதடா.
நாறும்‌ மலத்தில்‌ மனிதர்கேடாய்‌
நம்பும்‌ வைதீகர்கள்‌ ஈமக்காடாம்‌
சாறு பிழிந்த சடங்கினத்தால்‌
சக்தி, புத்தி, யுக்தி ஒத்திவைத்தார்‌.

மாறியாடும்‌ பெரு மானார்கூட்டம்‌
வஞ்சனைக்‌ கூத்துக்களோ எதேட்டம்‌
வீறும்‌ சுயேச்சையும்‌ மற்றதென்றே

வீழ்வது இந்தியா நாடிதன்றோ ?
சஞ்சலத்‌ தால்வாழ்வு சாய்வதெங்கு ?

தற்குறித்‌ தன்மையில்‌ தாழ்வதெங்கு ?
துஞ்சும்‌ அடிமை தொடர்வதெங்கு ?
சூழ்ச்சிச்‌ ௬மடர்‌ சுகிப்பதெங்கு 2

கெஞ்சும்‌ உழைப்பாளர்‌ மிஞ்சலெங்கு 2
கிள்ளை மொழியார்‌ தவிப்பதெங்கு 2
பஞ்சு படாப்பாடு மக்கட்கெங்கு 2
பாரினில்‌ இந்திய நாட்டிலன்றோ 2

(1995)

119

119