பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலை ஜ ன நாயக் இயக்கத்தில் செம்பாதிக்குமேல் முக்கியத் துவம் பெற்று விளங்குவது பெண் விடுதலை இயக்கம். சம தர்ம இயக்கத்திலிருந்தும், தொழிலாளர் இயக்கத்திலிருந்தும் கணமும் துளியும் பிரிக்கமுடியாத இயக்கம் அது. நூற்றாண்டும், இந்த நூற்றாண்டும் இதுவரையும் உண்மையைப் பல்வேறு உருவங்களில் எதிரொலித்து வந்திருக் கின்றன. பாரதமும் தமிழகமும் இதற்கு வழிவிலக்கானவை அல்ல. இந்தப் பாட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமும் சரி, தொழிலாளி வர்க்கப் போராட்டமும் சரி, சமதர்மக் கொள்கைப் போராட்டமும் சரி, வலுப்பெற்று விரிந்த பரந்த அளவில் வளர்ச்சியடைவதற்கு பெண் இன்று நடை முறையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் இழிநிலை ஒழியச் செய்ய வேண்டும் என்ற நோக்கோடும் போக்கோடும் எழுந்த பாட்டு இது. உடைந்து தகர்ந்து வரும் பழைய சமுதாயத்தின் பெண்ணைப் பற்றிய மதிப்பீடுகளை, ஏளன உணர்ச்சிகளைக் கிள்ளி எறியக் காரசாரமாகக் குரல் கொடுக்கும் பாட்டு கியது 1936-ல். இது உருவா உடனடிமை யொழிய வேண்டும் பெண்கள் உரிமை யடைய வேண்டும் - வேறென்ன வேண்டும் சென்ற இந்த 122

(உடனடி)

122