பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் புவி கண்டேன் பல்லவி துன்பமற்ற பொன்புவி கண்டேன் தோகையர் சுதந்திர சுக போக நலங்கள் மிகுந்த சரணங்கள் இன்ப வல்லியர்க் கிதுவே சுகவாசம் எந்த மதமும்வேண்டா இயல்பினர் நேசம் தென்புடன் சேர்வதால் தினமும் சந்தோஷம் திக்கற்றவர் இல்லையெனும் தக்கதோர் விசேஷம் (துன்) 135 (துன்) பாழும் அடிமைப் பூண்டைப் பறித்திடத்தாமே பகர்சமதர்ம ராச்சியம் பாடுவோம் நாமே சூழும் ஜீவானந்தம்சொல் துணிந்து வாழ்வோமே சுத்தமாய்க் கொடுமைமுற்றும் இத்தினம் விலகிப்போமே (துன்)

(1936)

135