பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசிசப் பேய்களெல்லாம் எந்தப் பாட்டு 1942 - ம் ஆண்டில் காவல் கைதியாக வேலூர் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. பொழுது இரண்டாவது உலகப் பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. மனித நாகரிகமே அழிந்துவிட்டது என்று குலைநடுங்கத்தக்க விதத்தில் ரத்தப் பிசாசு நரவேட்டையாடிக் கொண்டிருந்தது. இந்த மரணக்கூத்தைக் கண்டு. ஆறாத் துயரமும் தீராக் கோபமும் கொண்டு விரைவில் எழுந்த பாட்டு இது. பாசிசப் பேய்க ளெல்லாம்- உலகினைப் பாழ்படுத்துவதைப் பார் ரோஷமுடன் எதிர்த்தே-செஞ்சேனை நொறுக்கித் தள்வதைக் கேள் நாசிசமாம் புலைப்பேய்-சண்டாள ரத்தவெறிகொண்ட பேய் ஆசை மலைப்பாம்பாய்-யூரோப்பை 'அபக்'கென விழுங்கும் ! ஜப்பானென்ற குள்ளப்பேய்-கீழ்த்திசையில் துப்போடு வேட்டையாடும்.

138

138