பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோர்வதில் தேவாங்கு- இவர் சுற்றம் பெண்டுபிள்ளை குட்டிகள் வாடுஜர் யார்வைத்த தீவினையோ?- என்று ஏங்கி ஏங்கி ஏங்கியேங்கித் தவிக்கிறார் ! இட்டதைத் தின்கின்ற நாய்- அறிய இச்சையில் மூழ்கியே துச்சமுறும் பன்றி மட்டித்தனக் கழுதை— போல மக்களிற் கோடியர் மாக்களாய் வாழ்கிறார்! வெட்டை நோயோடவர்தான்- கற்பு வித்தார மாய்ப்பேசி வீம்படிக்கும் போது பெட்டைக் கோழிபோல- பெண்கள் பீத்தல் பழமையைப் பேணிக் கெடுக்கிறார்! சஞ்சலப் பேடித்தனம்- வேஷ் தாரித்தனம் அதி காரத்தன மின்றும் கொஞ்சமல்ல தனங்கள்! - மக்கள் - குட்டிச் சுவராகக் கூத்தாடு கின்றனர்! பஞ்சை பனாதியரை இந்தப் பாரில் உயர்த்திடல் வீரர்களின் கடன்! - மிஞ்சியதோர் நரகம் - இன்னும் - மேவுமென் போர்படு பாவியார் வஞ்சகர்! 163 (நித்தம்) (நித்தம்) (நித்தம்)

(1835)

163