பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சைப் பிழைப்பறி யோம் கொலை திருட்டும் அறியோம் இச்சகப் பேச்சறி யோம்-என் தோழனே எத்தும் புரட்டறி யோம். கோணல் மாணல் திட்டங்களால் கோடி கோடி யாய்க்குவித்தே வீணர்சிலர் கொழுக்கக் கண்டால்-என் தோழனே வெஞ்சினம் பொங்கு தடா. (காலுக்கு) மாடமாளி கைய வர்க்கு மன்னர்மகு டம வர்க்கு வாட வறுமை நமக்கு-என் தோழனே வந்திடல் வாழ்வெ தற்கு. ஒன்றுபட்டுப் போர்புரிந் தே உயர்த்துவோம் செங்கொ டியை இன்றுடன் தீரு மடா-என் தோழனே இம்சை முளறக ளெல்லாம். (காலுக்கு) 22 (காலுக்கு)

(காலுக்கு)

22