பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி வேண்டும் இந்தப் பாட்டு 1935-ல் எழுந்தது. பொதுவுடைமைக் கருத்துக்களைப் பல கோணங்களிலிருந்தும் பல பகுதி மக் களுக்கும் பலவாறாகவும் சொல்ல வேண்டும் என்ற வேட் கையும், தேவையும் மிகுந்திருந்த காலத்தில் எழுந்த பாட்டு இது. அன்று மக்களிடம் மிகப் பரவிக்கிடந்த ஒரு திரைப்படப் பண்ணின் அடியொற்றிப் பிறந்த பாடல் இது. பல்லவி பொதுவுடைமை பெறவேண்டும்-உடன் புரட்சிசெய்திட வேண்டும் வேறென்ன வேண்டும். அனுபல்லவி புதியஜீவித முறவேண்டும்-உறுவதற்கு பொருளாதிக்கம் அகலவேண்டும் வேறென்ன வேண்டும். (பொது) 26 (பொது) சரணங்கள் நோயும், பசியும், மக்கள் சாவும் பெருகுதந்தோ தேவைநிறைவு பெறவேண்டும் வேறென்ன வேண்டும்.

(பொது)

26