பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் 'நா' சமதாமமே ந்தப் பாட்டு 1935-ல் தீட்டப்பட்டது. ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு ஜோலார்ப்பேட்டையிலிருந்து வெளி "சமத்துவம்" இதழில் வெளிவந்த என்ற பாட்டு இது. அந்தக் காலத்தில் சமதர்ம மேடைகளிலும், தொழிலாளர் பொதுக்கூட்டங்களிலும் அதிகப்படியாகப் பாடப்பட்ட பாடல் களில் இதுவும் ஒன்று. சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் "சொல்லும் நா நமச் சிவாயமே" என்று ஒரு பதிகம் பாடியுள்ளார். அதே பாணியில் "சொல்லும் சமதர்மமே'" என்ற இந்தப் பாட்டுப் பாடப்பட்டது. அங்கு ஐந்தெழுத்துப்பற்று; தர்மப்பற்று. க 0 சென்னை மாகாணF தீவிர இளைஞர் மாநாடு (Radical Youth Conference) 1935-ல் சென்னையில் நடைபெற்றது. அதற்கு பம்பாயிலிருந்து இரண்டு தலைவர்கள் வந்திருந் தார்கள். இன்று ஆந்திர கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கும் தோழர் சுந்தரய்யாவின், அவரது கூட்டாளிகளின் முன் முயற்சியிலும், முழு முயற்சியிலும் நடத்தப்பட்ட மாநாடு இந்த மாநாட்டில் இந்தப் பாட்டை ஆக்கியவரே பாடும்படி வந்திருந்தவர்களால் வற்புறுத்தப் பட்டார். பாடினார். பம்பாய்த் தலைவர்கள் இன்னும் ஒருமுறை என்று விரும்பிக் கோரினர், சைவளம் காரணமாகவல்ல. பாட்டின் உணர்ச்சிவசம் காரணமாக.

28

28