பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் படிப்பினை 1937-ல் பிறந்தது இந்தப் பாட்டு. சோவியத் வாழ்வைப் பற்றிய சிந்தனை ஓட்டத்தின் எதிரொலி இந்தப் பாட்டில் சிறந்த போதனையாக நயம்பட வெளிப்படுகிறது. தமிழ்ப் பெருமக்களிடையில் அந்த நாளில் மிகுந்த வர வேற்போடு பரவிய பாடல் இது. தோழர்கள் வாழ்க்கையில் ஆனந்தம் வேறில்லை சோவியத் ஆட்சியின் மாட்சிய லாதில்லை (தோழர்) துன்பமும் வறுமையின் கொல்லையும் வேண்டார் சோறுடை வீடுடன் பாரினில் கேட்பார் நிமிஷமும் வீணே திரியலா காது வீரர்களே இனி வீறுடன் சேர்வீர் வெற்றி நல்வெற்றி தினம் பெறுவீர்-இனி சோவியத் ஆட்சியின் மாட்சிய லா தில்லை (தோழர்) சங்கம் நலம்பெற துங்கம தாக செங்கொடி ஓங்கி ஜெயம்பெற வாழ்க இங்கினி யாரே பங்கம் செய்வார்? எங்கணுமே தொழிற் சங்கமே காண்வீர் இன்றே நிமிர்ந்தேநீர் ஒன்ற குவீர்-இனி சோவியத் ஆட்சியின் மாட்சிய லாதில்லை (தோழர்)

56

56