பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவிதுடிக்க உழைப்‌ போரில்லை- அங்கு அல்வா விழுங்கும்‌ சோம்பேறி இல்லை பாவியர்‌ என்போர்‌ அந்‌ நாட்டி லில்லை பாங்கான இன்பம்‌ உலவக்‌ கண்டோம்‌

(சோவி)

தேசீய மாம்சிறு வீடு கட்டார்‌ செகமொன்றாய்ச்‌ சேர்த்திடும்‌ கொள்கை தொட்டார்‌ பாசி படர்ந்த பழமை கொன்றார்‌ பாரில்‌ நவயுகப்‌ பாதை சென்றார்‌ தூசியும்‌ லாபமில்‌ செல்வர்‌ கூட்டம்‌ துஷ்டக்‌ கிருமிகள்‌ தேய்த்துப்‌ போட்டார்‌ காசினி கண்ட புதுமையிலே

காட்சி பெரும்காட்சி ரஷ்யாவிலே

(சோவி)

வேத ஜபதபம்‌ வீழந்து போச்சு மின்சாரத்‌ தால்வாழ்வு மேன்மை

யாச்சு

ஆதர வில்லை மதங்க ளுக்கே அடிமாண்ட தாஸ்திகப்‌ பேய்க்கி றுக்கே

ஓதரு மாறு கல்வி வளர்ச்சி

|

உலகத்தை வென்றதோர்‌ நற்கி ளர்ச்சி போதனை செய்யும்‌ முன்னேற்ற மடா

பொங்கும்‌ ரஷ்யாவில்‌ துலங்கு தடா ஏழை என்னும்பெயர்‌ இல்லை யென்றால்‌ ஏற்ற முரைத்திட வேறு முண்டோ சூழும்‌ மெஷின்களால்‌ விஞ்ஞா னத்தால்‌ தொல்லை வறுமையைச்‌ சுட்டெ ரித்தார்‌ 28

(சோவி)

58