பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானோர் தொழிலாளி தொழிலாளியே தனது அதல பாதாள நிலைமையைக் ஊன் கல்நெஞ்சும் கரைந்துருகியோடப் பாடும் பாட்டு. உருக, உளம் உருக, உயிர் உருகப் பாடும் பாட்டு. தன்னைச் சமுதாயத் துயர்க்குழியில் புதைத்து வதைக்கும் பெரும் நோய் தீர எது ஏற்ற மருந்து, எது மருந்தல்ல என்பதைத் தொழிலாளி தெரிந்து புரிந்து பாடுகிற பாட்டு இது. இந்தப் பாட்டை இசைவளம், குரல்வளம், உணர்ச்சி கண்ணீர் வளத்தோடு பாடியபொழுதெல்லாம் கருவிழிகளைக் குளத்தில் மிதக்க விடாதவர்கள் அருமையிலும் அருமை யெனலாம். நண்பர் 19. கே. ஷண்முகம் பதிபக்தி நாடகத்தில் தேயிலைத் தோட்டத்திலும், கோவை இராமதாஸ் தொழி லாளர் பொதுக்கூட்டங்களிலும் பாடிய வேளைகளில் எத்தனை ஆயிரம் பேர் மயிர்க் கூச்செறிந்து பெருமூச்சு விட்டுக் பாட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள் தெரியுமா? இந்தப் 1938-ல் பிறந்தது. (பெரியோர் இருக்குமிடம்--என்ற மெட்டு) நானோர் தொழிலாளி - ஒரு நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை 69

(நானோர்)

69