பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்குடி அழுதரற்றும் உறுதுயரால் சீர்குலையும் வன்கொடியர் பணக்கொழுப்பர் மறந்துமே திரும்பிப்பாரார் தோழா - செல்வர் மனத்தடிப்பை உடைத்தெறிந்து வாழாய் (செக்கு) எல்லோரும் இன்பமாக இருக்கஎண்ணித் தொண்டுசெய்தோர் வல்லார் தனவந்தரை - வாழவைத்த கதைதெரியும் தோழா - இனி மயங்கிடாது பயன்தெரிந்து வாழாய் உனக்காக உழைப்பதாக உரைத்தவரில் பலர்முடிவில் பணக்காரர் தாசராகிப் பசப்பினதை உலகறியும் தோழா பகுத்தறிந்து துணைதெரிந்து வாழாய் - நீ (செக்கு) (செக்கு) அக்குகளும் பாத்தியமும் அரசியலும் தனம்படைத்தோர் பைக்குள் அடக்கம் தெரிந்தாய் - பாடுபட்டும் கேடுகெட்டாய் தோழா - கெட்ட பணத்திமிரைத் தகர்த்தெறிந்து வாழாய் (செக்கு) உழைப்பவர் முகம்மலர உன்குடும்பம் வாழ்வுபெற தழைக்கும் பொதுவுடைமை தான்மருந்து வாழ்கவென்றே தோழா - இந்த தாரணியெங்கும் முரசறைந்து வாழாய் (செக்கு)

70

76