பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமையே வெற்றி முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போராட் உத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க ஒற்றுமைதான் மகத்தான ஆயுதமாகும். ஒற்றுமையில் தான் வர்க்க வெற்றியின் மர்மம் பொதிந்து கிடக்கிறது. தொழிலாளி வேண்டியது Sep தொழிலாளிவர்க்கம் - நவயுகத்தில் - இழக்க ஒன்று இருந்தால் அது அதைப் பிணைத்துள்ள அடிமைச் சங்கிலிதான் என்றும், ஆனால் அது பெறவேண்டியதோ ஒரு புதிய உலகம் என்றும், இந்தப் புதிய உலகத்தை அடையத் தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதிலும் ஒன்றுபட வேண்டுமென்றும் சென்ற நூற்றாண்டின் முற்பகல் இறுதியில் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் குருநாதரான காரல் மார்க்ஸ் நிகரற்ற தீர்க்க தரிசனத்தோடு முழங்கினார். 1937-ல் கோவைப் பஞ்சாலைத் தொழிலாளிகள்- -பல ஆலைகளில் பணிபுரிந்தவர்கள் - உலகத் ஒன்றுபடுங்கள் என்று முழங்கிப் தொழிலாளர்களே கொஞ்ச போராடினர். நஞ்சம் தெரிந்தும், ஒன்றும் தெரியாத நிலையிலும் போராடி னார்கள். லட்சுமி மில் தொழிலாளர் வெற்றிக்கு -பல மில் களைச் சார்ந்த பதினாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர் களின் ஒற்றுமை ஆர்ப்பாட்டம் பெருந்துணையாக இருந்த தென்பதைத் தொழிலாளர்கள் கண்டனர். இந்த நேர் அனுபவத்திலிருந்து எழுந்த பாட்டு இந்தப் பாட்டு.

77

77