பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்படைந்த தொழிலாளி தொழிலாளர் கோரிக்கை -கிளர்ச்சிகளும் வேலை நிறுத்தப் போராட்டங்களும் செந்தூள் பறத்திக்கொண்டிருந்த காலம். தன்னுடைய உரிமைகளிலும், கோரிக்கைகளிலும் தொழிலாளிப் பெருமக்களுக்கு மேன்மேலும் விழிப்புப் பெருகிவந்த காலம் சட்டத்தில் பெற்ற உரிமைகளை, பெற வேண்டிய உரிமைகளைப் பற்றிய அறிவு சராசரித் தொழிலாளிக்கு வாழ்க்கை மூச்சாக மாறி வந்த காலம்.

இந்தக் காலத்தில் தொழிற்சங்க தலைவர்களுக்குத் தொழிலாளர் கோரிக்கை - உரிமைகளைத் திரட்டிக் கொடுக்க வேண்டியதும், பரப்பித்தீர வேண்டியதும் பெரும் பொறுப்பாக விளைந்தது. 6} மேற்படிப் பொறுப்பை நிறைவேற்றும் திசைவழியில் முளைத்த பாட்டு இது. 1938-ல் பிறந்தது. - பாடுபட்ட தாலே பலன்பெறுவோம் - நாங்கள் பாரிலுள்ள இன்ப முழுதும் பெறுவோம் நாடறிய எங்கள் உரிமை நாடுவோம் -- நாங்கள் - நாலிரண்டு மணிநேர வேலை தேடுவோம். ஜீ-6 நம்பியே மோசம் போனோம் நஷ்ட முற்றுப் போனோம் சம்பள உயர்வு காணும் சண்டைக்குத் தயாரானோம் 81

(பாடு)

81