பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பங்கஜவல்லி கணக்கு

ஐயர் வரவு 75 0 0
பம்பாய் சிலக்சேலை 35 0 0
ஆர்கண்டி ஜாக்கட் 6 0 0
ஜானகிக்குப் பட்டுப்பாவாடை 12 0 0
குட்டிக்கூரா சோப், பவுடர்,
ஜவ்வாது, ரிப்பன்
5 0 0
சிந்தாமணி செலவு 2 8 0
பெங்களூர் காய்கறி 2 0 0
வரவு 75 0 0
செலவு 62 8 0
—— —— ——
இருப்பு 12 8 0

இங்கே, கணக்கு நேராகவில்லை!


செட்டியார் கணக்கு காலிகோ பைண்டு நோட்புத்தசத்திலே குமஸ்தாவால் எழுதப்பட்டது. குமாஸ்தா குமரப்பன் தன் குறிப்பைப் பாக்கட் சைஸ் டைரியில் குறித்துக்கொண்டான். லோகாமிர்த ஐயர், கும்பாபிஷேக விளம்பரக் காகிதங்களைக் கொண்டு, குமாரிகோகிலம் அழகாகத் தைத்துக்கொடுத்த நோட்டுப் புத்தகத்திலே விவரம் எழுதி அதைப் பாகவதத்திலே பத்திரமாக அடக்கம் செய்தார்! பங்சுஜவல்லியின் கணக்கு, சினிமா விளம்பரத்தாளின் பின்புறத்திலே குறிக்கப்பட்டது. கந்தனுக்கும், குப்பிக்கும், ஏடு ஏது எழுத!

அவன் வீடுவந்தான் ஒரு ரூபாயைத் தந்தான்.

"என்னா இது? எழவாப் போச்சு, ஒத்தே ரூபாயைக் குடுத்தா, எதுக்குன்னு ஆகும்?"

12