பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஒத்தெ ரூபாயா? ஒங்கப்பன் நோட்டு நோட்டா நீட்டறானா? போடி, இந்தப் பணத்தை வாங்க அந்தப் பயகிட்ட நான் பல்லைக் காட்டினது உனக்கென்னா தெரியும்?"

"அப்பாடுணயா சொல்லுங்க? ஒத்தே ரூபாதானா கொடுத்தார்?"

"ஆமாண்டின்னா......."

"தெரியுதே லட்சணம்! சொல்லுவானேன்? நீங்க நின்ன நிலையிலேயே ஆடறது சொல்லுதேன்னே! ஐஞ்சு ரூபா வாங்கி அனியாயமா குடிச்சுப்போட்டு,என் அடிவயித்திலே நெருப்பைப் போடறிங்க."

"சிச்சீ! ஐஞ்சுமில்லே பத்துமில்லை. ரெண்டரை ரூபா கொடுத்தாரு"

"மிச்சம் எங்கே? என்னாங்க அனியாயம், ஒண்ணரை ரூபாய்க்கா குடிச்சித் தொலைக்கணும்??"

"செ, கழுதெ! எவண்டி ஒண்ணரைக்கும் ரெண்டரைக்கும் குடிப்பான். ஒங்க அண்ணனா ஈட்டுக்காரன்?"

"ஈட்டுக்காரனுக்குக் கடனைக் கொடுத்திட்டிங்களா?"

"விடுவானா? எட்டணா வாங்கிக்கிட்டான்"

"போவுது. அப்படின்னாலும், இன்னம் ஒரு ரூபா?"

"ஒரு ரூபா? முழுங்கிட்டேன் போயேன், பசியானா பசி உயிர் துடிச்சுது கொஞ்சம் நாஸ்தா பண்ணேன்"

"ஒரு ரூபாய்க்கா?

"ஏண்டி எனக்கென்ன, சாலா வயிறு? ரெண்டணாவுக்குத் தின்னேன்?"

"மிச்சம்"

13